
வாகன இறக்குமதிக்கு வரி விலக்கு இல்லை
அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பல கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் முதலில் இறக்குமதி செய்யப்படும்.
வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
