நுவன் போபகேயை ஆதரித்து மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

-மட்டக்களப்பு நிருபர்-

9 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக “மக்கள் போராட்டம் முன்னணியில் மக்களின் வேட்பாளர்” எனும் தொனிப்பொருளில் போட்டியிடும் வேட்பாளர் நுவன் போபகேயை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

மக்கள் போராட்ட முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தர்மலிங்கம் கிருபாகரனின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மக்கள் போராட்ட முன்னணி தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த முதலிகே பிரதான உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ராஜீவ் ,மக்கள் போராட்ட முன்னணி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்