மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் எம்.ஜே.குணசிறி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்