பத்து வாள்களுடன் இருவர் கைது
களுத்துறை, மிஹிகதவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை மிஹிகடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 35 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, மிஹிகதவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
