மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இவ்வருடம் (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இவ் விசேட கருத்தரங்கில் இரசாயனவியல் பாட ஆசிரியர் செல்வராசா – தேவகுமார் வளவாளராகக் கலந்து கொண்டு பல்வேறு செய்முறைகள் ஊடாக விளக்கமளித்தார்.

இக் கருத்தரங்கில் சுமார் 35 கணித, விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்