தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சப்பைரத திருவிழா

-யாழ் நிருபர்-

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாள் சப்பைரத திருவிழா நேற்றையதினம் வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.

துர்க்கை அம்மன் பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளியாக உள்வீதியுலா வந்து, சப்பைரதத்தில் வீற்றிருந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 04.09.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் இன்று இரதோற்சவமும் நாளை ஞாயிற்றுக்pகழமை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, அன்றையதினம் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவ நிறைவடையும்.

இதில் பல இடங்களில் வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்