மட்டு.தேத்தாத்தீவில் பாரிய விபத்து

மட்டக்களப்பு தேத்தாத்தீவில் இன்று சனிக்கிழமை அதிகாலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டு கல்முனை பிரதான வழித்தடத்தினூடாக கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் சொகுசு பேருந்தும் அதே திசையில் கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியும் தேற்றாத்தீவு பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.

இதன் போது எவருக்கும் பாதிப்பு இல்லாமல் மயிரிழையில் பாரிய விபத்து எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்