நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரிசி விலை நிலவரம்
கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹாராம உள்ளிட்ட பிரதேசங்களில் அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் சிவப்பு அரிசி ஒரு கிலோ 210 ரூபாய்க்கும் மற்றும் ஒரு கிலோ வெள்ளை அரிசி 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
