மட்டக்களப்பில் மயானத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு: நரபலி என சந்தேகம் ?

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து  சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தேற்றாத்தீவு பகுதியை சேர்ந்த சதாசிவம் அஜந்தன் (வயது – 32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான தடையங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நரபலி பூஜைகள் எதுவும் நடாத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் குற்றத்தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்