
கல்குடா கல்வி வலய ஆசிரியர்களுக்கான உளநல வலுப்படுத்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி
மாணவர்களின் உளநல வலுப்படுத்தலுக்கான தொடர்ந்து வெற்றிகரமான முன்னொடுக்கப்படுகின்ற மாணவர்களின் உளநல வலுப்படுத்தலுக்கான பயிற்சி மற்றும் வாழ்க்கைத் திறனை முன்னேற்றும் மனோகரிக்கல்வியும் முறை என்பவற்றை உள்ளடக்கியதான, பயிற்சியாளர்களுக்கான பயிற்சியானது கடந்த செவ்வாய்க்கிழமை ஆம் திகதியன்று வியாழக்கிழமை சதுர்முகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன் வழிகாட்டுதல்களோடு, மட்டக்களப்பு மாவட்ட உளநல பிரிவினரது பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர். டான் சௌந்தராஜாவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றுவரும் இத்திட்டத்தில் கல்குடா கல்வி வலய ஆசிரியர்கள் 35 பேர் கலந்து பயிற்சி பெற்றிருந்தனர்.
பாடசாலை மணவர்களுக்கு உளநல செயற்பாடுகள மூலம் அவர்களின உளவியலை வலுமிக்கதாக மாற்றுவதற்கான வழிமுறைகள் அடங்கிய மாணவர்களுக்கு கதைசொல்லல், முன்மாதிரி நாடக கற்றல் முறை மூலமான வாழ்க்கை திறன் பயிற்சியான இவ் பயிற்சி நெறி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


