
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 8 பேர் காயம்
கண்டியில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொளுத்தி வெடித்ததில் 6 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொளுத்தியதாக தெரியவருகின்றது.
காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தேர்தல் பேரணியில் ஈடுபட்டிருந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
