பிரபல சீரியல் நடிகர் மரணம்

பாலிவுட்டில் துணை கதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துப் புகழ்பெற்ற 48 வயதான நடிகர் விகாஸ் சேத்தி மாரடைப்பால் உயிரிழந்தார்.

நாசிக் மாவட்டத்திற்கு குடும்ப நிகழ்விற்காக விகாஸ் சேத்தியும் அவரது மனைவி ஜான்வி சேத்தியும் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

ஆனால் விகாஸ் சேத்தி மருத்துவமனைக்குச் செல்லவில்லை. பின்னர் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி உயிரிழந்தார்.

விகாஸ் சேத்தியின் கடைசி தருணங்கள் குறித்து அவரது மனைவி ஜான்வி சேத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், விகாஸ் சேத்தியின் இறுதிச் சடங்குகள் இன்று திங்கட்கிழமை மும்பையில் நடைபெறும் என்று அவரது மனைவி தெரிவித்தார்.