
44 வயதுடைய பெண் 28 துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது
அக்குரஸ்ஸ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தை சோந்த மறைந்த மாகாண அமைச்சர் பி.பி.திஸாநாயக்காவின் 44 வயதுடைய மகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்குரஸ்ஸ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் 28 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அரசியல்வாதியான திஸாநாயக்க 2000 ஆம் ஆண்டு காலமானார். அண்மையில், அவரது 11 வயது பேரன் பாடசாலையில் தோட்டாக்களை கொண்டு வந்து விளையாடியபோது ஆசிரியரிடம் சிக்கிக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பாடசாலை தலைமை ஆசிரியரிடம் ஆசிரியை தெரிவித்ததையடுத்து, இந்த விடயம் குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மாணவனின் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, கலென்பிந்துனுவெவ பொலிஸார் வீட்டை சுற்றிவளைத்ததில், 17 ரி-56 ரவைகள், 9மிமீ 10 ரவைகள் மற்றும் ஏனைய துப்பாக்கிகளுக்கான பல்வேறு தோட்டாக்கள் உள்ளிட்ட தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இவரை செப்டம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
