உலகின் முதல் டிரில்லியனராக மாறப்போகும் எலோன் மஸ்க்
இன்ஃபோமா கனெக்ட் அக்கடமியின் அண்மைய பகுப்பாய்வு அறிக்கையின்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் , 2027 ஆம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியனராக இருப்பார் என தெரியவந்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், 251 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையவர் மற்றும் அவரது சொத்துக்கள் ஆண்டுதோறும் 110 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வருவதாக இன்ஃபோர்மா கனெக்ட் அக்கடமி தெரிவித்துள்ளது.
மேலும், அவர் சி.இ.ஓவாக இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் மதிப்பு இந்த ஆண்டு 1195 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கௌதம் அதானி 2028 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது டிரில்லியனராக மாறுவார் என்றும், அவரது சொத்து ஆண்டுக்கு 123 சதவீதம் என்ற விகிதத்தில் வளரும் என்றும் இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி கணித்துள்ளது.
