
தனக்கு ஆதரவு வழங்காதவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி ரணிலல் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமக்கு ஆதரவான பல கட்சி அமைப்புகள் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காத தனிநபர்கள் அரசாங்கத்தில் தொடர்வது அர்த்தமற்றது என்றும், தமது தீர்மானங்களை எதிர்க்கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாக அரசியல் சூழ்ச்சியில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விளைவாகவே, ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள், தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்கு சுதந்திரம் வழங்கி, கருத்து வேறுபாடுள்ள உறுப்பினர்களை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குறித்த மேன்முறையீடுகளையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 04 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
