காட்டு யானைகளால் தொடரும் உயிரிழப்புகள்!

-சம்மாந்துறை நிருபர்-

கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை புதிய பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்முனை புதிய பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறமாக உள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் பெரிய நிலாவனை பிரதேசத்தை சேர்ந்த (வயது 56) செல்லையா வேலாயுதம் என்பவரே உயிரிழந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்

இப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் காட்டு யானை தாக்கி பலியான மூன்றாவது சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்