அலி சாஹிர் மௌலானா மற்றும் பசீர் சேகுதாவூத் இடையிலான நட்பு ரீதியான சந்திப்பு

அமைச்சர் அலி சாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் இடையிலான நட்பு ரீதியான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றது

இதன் போது, இன்று சனிக்கிழமை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஒன்றிணைந்த பிரச்சார பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆக்கப்பூர்வமான கருத்தாடல்கள் இடம்பெற்றது

இன்று சனிக்கிழமை பிற்பகல் அமைச்சர் அலி சாகிர் மௌலானா தலைமையில், புன்னைக் குடா வீதியில் இடம்பெற உள்ள பிரச்சார பொதுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான நசீர் அஹமட், தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் உட்பட உள்ளூர் வெளியூர் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதுடன், இதற்கான அழைப்பும் முன்னாள் அமைச்சரிடம் விடுக்கப்பட்டு அவர் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத் தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்