
வன்னித் தேர்தல் தொகுதியில் அமைச்சர் சுசில் பிரேமஜந்த் தலைமையில் கலந்துரையாடல்!
-வவுனியா நிருபர்-
ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஜனாதிபதி தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை வெல்ல வைக்க வன்னித் தேர்தல் தொகுதியில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதில் ஆராயப்பட்டதுடன், nஅபாறுப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுடன் இராஜாங்க அமைச்சர்களான கே.கே.மஸ்தான், சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினரான கு. திலீபன் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

