
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட மற்றும் அத்திட்டிய ஆகிய பகுதிகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 3 சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
படோவிட்ட மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 47, 48 மற்றும் 49 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்ற இருவரிடருந்து 06 கிராம் 200 மில்லிகிராம் மற்றும் 05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கல்கிஸ்ஸை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
