
பஸ் விபத்தில் 47 ஊழியர்கள் படுகாயம்
பிபில – லிந்தகும்புர பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இரவு இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஆடை தொழிச்சாலையைச் சேர்ந்த 47 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிததுள்ளனர்.
நாகல, பிபிலவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்சுடன் மற்றுமொரு பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த பஸ் விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலையை பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றும் அதே வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்சும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
