இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி: அவுஸ்திரேலிய அணி வெற்றி

7

அவுஸ்திரேலிய அணி 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபதுக்கு 20 போட்டி நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 155 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் பவர் பிளேயில் அதிக ஓட்டங்கள் விளாசிய அணி என்ற வரலாற்றுச் சாதனையை அவுஸ்திரேலிய அணி படைத்துள்ளது.

டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய அணி முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களைக் குவித்தது.

5ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் 30 ஓட்டங்களையும் 6ஆவது ஓவரில் டிராவிஸ் ஹெட் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாகக் குவித்தனர்.

குறிப்பாக 17 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹெட் 25 பந்துகளில் 80 ஓட்டங்களை அணிக்காக அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணி 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath