கடன் சுமையில் தவிக்கும் சாரதிகளுக்கு ரணில் வழங்கியுள்ள வாக்குறுதி!

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக கடன் சுமையில் தவிக்கும் சாரதிகளின் கடனை மீளச் செலுத்துதலை மறுசீரமைப்பதற்காக, அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சந்தர்ப்பம் பெற்றுக்கொடுப்பதாக, ஜனாதிபதித் தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நான்கு பிரதான போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று புதன்கிழமை கொழும்பு காலிமுகத்திடல் பசுமை மைதானத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழிற்துறை சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை வல்லுநர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய நான்கு பிரதான போக்குவரத்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்