
நுவரெலியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்
-நுவரெலியா நிருபர்-
எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் வாக்களித்து வருகின்றனர்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

