மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இடம் பெற்றன

இதேவேளை, இன்று புதன்கிழமைகாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ள பொலிஸாருக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபவுள்ள 404 பொலிஸார் தபால் மூலம் வாக்களித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்