வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருகோணமலை முதல் காங்கேசன்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.

சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்