போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

போதை மாத்திரைகளுடன் பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்

வெவஸ்ஸ கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை கொண்டு வந்து பதுளை பகுதியில் விற்பனையில் ஈடுபடுவதாக பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய தேடுதலை மேற்கொண்ட போது சந்தேக நபரிடம் இருந்து 345 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர் சந்தேக நபரை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்