பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

மேற்குவங்க மாநிலம் – கொல்கத்தாவில் அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் வைத்தியர் கடந்த 9ஆம் திகதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தினையடுத்து மேற்குவங்க மாநிலத்தின் சிறப்பு சட்டசபைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது பாலியல் பலாத்கார தடுப்பு சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டதுடன், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கச் சட்டத்தில் இடமுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாலியல் வன்கொடுமைகள் மனித குலத்திற்கு எதிரானவை எனவும், ஆகவே சமூக சீர்திருத்தங்கள் தேவை என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து குறித்த சட்டமூலம் சட்ட சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்