ஹெரோயினுடன் பெண் உட்பட மூன்று பேர் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரும் மட்டக்குளி மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 19 மற்றும் 58 வயதுடைய இரண்டு நபர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து 07 கிராம் 320 மில்லிகிராம் ஹெரோயினும் மற்றவரிடம் இருந்து 04 கிராம் 740 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 48,390 ரூபா பணமும், பெண்ணிடமிருந்து 08 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்