
மட்டக்களப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்று கூடிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை உள்ளடத்திய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலங்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் பின்னர் தமது கடமைகளை முன்னெடுப்பதற்காக திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

