வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்கும் பழங்கள்

வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்கும் பழங்கள்

வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்கும் பழங்கள்

⭕வைட்டமின் பி 12 என்பது நம் உடலின் ரத்தம் மற்றும் நரம்பு செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். உடலில் வைட்டமின் பி12 சத்து குறைபாடு இருந்தால் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

⭕நம் உயிரணுக்கள் அனைத்திலும் உள்ள மரபணுப் பொருளான டிஎன்ஏவை உருவாக்க, மெகாலோபிளாஸ்டிக் அனீமியாவை தடுக்க இது உதவுகிறது. உடலில் வைட்டமின் பி12 சத்து குறைவாக இருந்தால் அதனை சரி செய்ய நீங்கள் பல வகையான உணவுகளை சாப்பிடலாம், இதில் சில பழங்களும் அடங்கும். வைட்டமின் பி12-ன் மிகச் சிறந்த மூலமாக கருதப்படும் சில பழங்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

வாழைப்பழம்

💦வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு சிறப்பான பழமாக கருதப்படுகிறது. உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், தினசரி வாழைப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் இந்த குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம். மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஆரோக்கிய பொக்கிஷமாக கருதப்படும் வாழைப்பழங்களில் பொட்டாசியமும் சிறந்த அளவில் உள்ளது.

ஆரஞ்சு

💦பொதுவாக ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் இதில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்தும் நிறைந்திருக்கிறது. இவை தவிர கால்சியம், பீட்டா கரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பிற ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஆப்பிள்

💦 நீங்கள் வைட்டமின் பி12 குறைபாட்டை எதிர்கொண்டால் உங்கள் டயட்டில் ஆப்பிள்களை சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி12-ன் சிறந்த மூலமாக ஆப்பிள்கள் உள்ளன. இது தவிர ஆப்பிள்களில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளன. இவை நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

ப்ளூபெர்ரி

💦 உங்கள் உடலுக்கு வைட்டமின் பி12 வேண்டும் என்று முடிவு செய்தால் நீங்கள் சாப்பிடும் பழங்களில் ப்ளூபெர்ரிக்களை சேர்த்து கொள்ளலாம். ஏனென்றால் இது வைட்டமின் பி12-ன் மிகச் சிறந்த மூலமாகும். மேலும் ப்ளூபெர்ரிக்களில் பல வகை ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. மேலும் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம். மேலும் செரிமான பிரச்சனைகளையும், மன அழுத்தத்தையும் குறைக்க இது உதவும்.

ஸ்ட்ராபெர்ரி

💦உங்கள் உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் உங்கள் டயட்டில் சுவை மிகுந்த ஸ்ட்ராபெர்ரிக்களை சேர்த்து கொள்ளலாம். தவிர ஸ்ட்ராபெர்ரிக்கள் வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாகும். இது சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்கும் பழங்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்