
கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லொறி
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலைக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தலவாக்கலையில் இருந்து ஹட்டன் கொட்டகலை நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்தது.
விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
