
பெண் உட்கொண்ட கருக்கலைப்பு மாத்திரை: மூன்று வருடங்கள் வயிற்றிலிருந்த சிதைந்த கரு
இந்தியா, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில், அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றிலிருந்த இறந்த சிசுவின் உடல் தசைப்பாகத்தை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
அனக்கா பள்ளியைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணொருவர், மூன்று வருடங்களுக்கு முன்னர் கர்ப்பமாகியுள்ளார்.
ஏற்கனவே இரு குழந்தைகள் இருக்கின்ற நிலையில் மூன்றாவது குழந்தை வேண்டாமென எண்ணியவர் கருக்கலைப்பு மருந்தை உட்கொண்டார்.
இந்த மருந்தின் மூலம் கரு பாதியளவில் கரைந்துள்ளது.
இதன் விளைவாக சுமார் 3 வருடங்களாக குறித்த பெண் வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார்.
கடந்த வாரம் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் இறந்த சிசுவின் உடல் தசைப்பாகம் இருப்பது தெரிய வந்துள்ளது.
அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றிலிருந்த இறந்த சிசுவின் உடல் தசைப்பாகத்தை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சிகிச்சைக்குப் பின்னர் பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
