சுவர் முதல் கழிவறை வரை அனைத்தும் தங்கத்தினால் ஆன விடுதி

வியட்நாமின் ஹனோய் நகரில் முழுக்க முழுக்க தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்ட விடுதி ஒன்று தற்போது பிரபல்யம் அடைந்து வருகின்றது.

டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் என்ற இந்த விடுதியின் சுவர்கள் முதல் குளியலறை பொருட்கள் வரை கிட்டத்தட்ட அனைத்தும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியானது 25 மாடிகள் மற்றும் 400 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதிகளை உள்ளடக்கியுள்ளது. கதவுகள், ஜன்னல்கள், குழாய்கள் மற்றும் கழிப்பறை என அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளமையே இந்த விடுதியின் சிறப்பு என்று சொல்லப்படுகின்றது.

மேலும், இங்கு தங்கும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் பாத்திரங்கள் கூட தங்கத்தாலேயே செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதியின் முகப்பு 54,000 சதுர அடி என கூறப்படுகின்றது. தங்க முலாம் பூசப்பட்ட ஓடுகளால் விடுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதியின் ஊழியர்களின் சீருடைகள் கூட சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் உள்ளதாக சொல்லப்படுகின்றது.

இந்த விடுதியில் தங்குவதற்கான அடிப்படை அறைக்கான விலை 72,000 ரூபாவாவும் டபிள் பெட்ரூம் வசதி கொண்ட அறை ஒரு இரவுக்கு 268, 000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த விடுதியில் ஆறு வகையான அறைகள் உள்ளன. இன்னும் பார்க்கப்போனால், பிரசிடென்ஷியல் சூட்டில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 18 இலட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் விடுதி ஆடம்பரத்திற்கும், அதன் செழுமைக்கும் பெயர்போனது. மேலும், ஆடம்பரத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு தனித்துவமான இடமாக உள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்