இந்தியாவில் உணர்வுப்பூர்வமான நினைவுகளை மீட்டும் தாய்ப்பால் ஆபரணங்கள்

இந்தியாவில், சென்னையில் தாய்ப்பாலில் நகை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

பொதுவாக வைரம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றில்தான் நகை செய்வார்கள். ஆனால், தாய்ப்பாலில் நகை செய்வது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

தாய்க்கும் சேய்க்கும் இடையிலான உறவை தொப்புள்கொடியை அடுத்து இன்னும் வலுப்படுத்துவது என்றால் அது தாய்ப்பால்.

தாய்ப்பாலில் உள்ள சத்துதான் குழந்தை வளர்ந்த பின்னரும் அவர்களுக்கு வலிமையைக் கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

தாயின் இரத்தத்தை பாலாக்கி சேய்க்கு புகட்டும் தாய்ப்பால் பலராலும் புனிதமாகப் பார்க்கப்படுகிறது.

அந்த அழகிய தருணங்களை என்றும் மறக்க முடியாததாகவும் நெகிழ்ச்சியானதாகவும் மாற்ற விரும்பும் தாய்மார்கள், தாய்ப்பாலினால் பென்டன், மோதிரம் போன்ற நகைகள் செய்து அணிந்துகொள்கிறார்கள்.

இது குழந்தை வளர்ந்த பின்னரும் ஞாபகார்த்தமாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்