
பாடசாலைக்கு வெளியே நின்றவர்களை மோதிய பேருந்து : 5 மாணவர்கள் உட்பட 11 பேர் பலி!
சீனாவின் சன்டொங் மாகாணத்தில் பாடசாலை பேருந்து ஒன்று, பொதுமக்கள் மீது மோதியதில், ஐந்து மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இவ்விபத்தின் போது பலர் காயமடைந்துள்ளதுடன், சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டாய்யன் நகரில் பாடசாலைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது பேருந்து மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனவும், அதனைத்தொடர்ந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சீன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
