
இந்தியா தெலுங்கானாவில் தொடரும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு!
இந்தியாவின் ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் பெய்தவரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது.
ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன, பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இரண்டு மாநிலங்களிலும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே 31,238 பேர் மீட்கப்பட்டு, 166 நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், ஆந்திராவில் ஆடு, எருமை உள்ளிட்ட 39 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், பால்நாடு மாவட்டத்தில் 5,300 கோழிகள் (poultry birds) உயிரிழந்துள்ளன, 38 மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன எனக் கூறப்படுகிறது.
குண்டூர் மாவட்டத்தில் 33 கேவி மின்கம்பங்கள் சேதமடைந்து, 12 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும், 1,067 கி.மீ நீளமுடைய சாலைகள் சேதமடைந்துள்ளன, அதே வேளையில் 129 இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, 20 மரங்கள் வேரோடு சாய்ந்தன, இயற்கை சீற்றத்தால் போக்குவரத்து பரவலாக துண்டிக்கப்பட்டது.
20 மாவட்டங்களில் 1.50 லட்சம் ஹெக்டேர் விவசாயப் பயிர்களும், 13,920 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன, ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கி 6 பேர் பலியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்ப இந்திய கடற்படை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதில் ஒன்று ஏற்கனவே விஜயவாடாவை அடைந்து விட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கினறன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
