பிறப்பு சான்றிதழ் விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் வழங்கும் பிரதேச செயலகம்

நுவரெலியா பிரதேச செயலகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக பிறப்பு சான்றிதழ் பெற வரும் பொது மக்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை வழங்குவதால் தாம் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், பிறப்பு சான்றிதழ் நகலை பெற, செல்லும்போது இறப்பு சான்றிதழ் விண்ணப்ப படிவத்தை கொடுப்பதால் தாம் ​​அதிர்ச்சி அடைய வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா பிரதேச செயலக பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், ​​பிறப்பு சான்றிதழ் நகல்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்துள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்த போதிலும், தேவையான விநியோகத்தை வழங்க தவறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்