சீகிரியாவை பார்வையிட வந்த பிரித்தானிய பிரஜை திடீர் மரணம்

மாத்தளை சீகிரியாவின் மலைக்குன்றில் ஏறிய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த குறித்த நபர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சீகிரியாவை பார்வையிட வந்துள்ள நிலையில் சீகிரியாவில் ஏறும் போது சுவரோவிய குகைக்கு அருகில் ஏற்பட்ட திடீரென சுகவீனம் காரணமாக சீகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்