பொதுவேட்பாளர் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மீனவர் பிரதிநிதிகள்
-யாழ் நிருபர்-
வட மாகாண மீனவர் அமைப்புக்களை பிரதிநித்துவப்படுத்தும் அ.அன்னராசா மற்றும் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் தலைமையில் கோப்பாய் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு சார்பாக தீவிர பிரசாரம் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாகவும், வர்த்தக நிலையங்களுக்கு சென்றும், தமிழ் பொது வேட்பாளர் என்பவர் காலத்தின் சரியான தெரிவு என்றும், சிதறிக்கிடக்கின்ற தமிழ் மக்களை ஒன்றிணைப்பதற்க்கான ஒரு செயற்பாடு என்றும் தெரிவித்து, தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
