மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்
அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை மனைவியை கோடரியால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளான்.
திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
