கொள்கைகள் அற்ற அரசியல் செயற்பாடுகளே நெருக்கடி நிலைக்குக் காரணம்
கொள்கை ரீதியான அரசியல் செயற்பாடுகள் இன்மையே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்குக் காரணம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகமை நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அன்று ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்தவர்கள் இன்று அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குடும்ப ஆட்சி நிறைவடைந்து இறுதியாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஹோமாகம பந்துலவும் ரணிலுடன் உள்ளார். மஹரகம தினேஸ் குணவர்த்தன, கம்பஹா பிரசன்ன ரணதுங்க, கண்டி மஹிந்தானந்த, களுத்துறை ரோஹித்த ஆகியோர் ரணிலின் பக்கம் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் ரணிலை விமர்சித்தவர்கள் இந்த அரசியல் கலசாரம் மாற்றப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
