
அரச ஊழியர்களின் வேதனம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிப்புக்கு அனுமதி
அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி 1, 2025 முதல் அரச ஊழியர்களின் அடிப்படை வேதனம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.
அரச சேவையின் அலுவலக உதவியாளர் தரம் மூன்றிற்கு 5,450 ரூபாவினாலும், இரண்டாம் தரத்திற்கு 8,760 ரூபாவினாலும், தரம் ஒன்றிற்கு 10,950 ரூபாயினாலும் சம்பளம் அதிகரிக்கப்படவிருப்பதோடு, அதன் உயர்தர சேவைகளுக்கு 13,980 ரூபாவினால் சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.
மூன்றாம் நிலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ரூ.8,340 சம்பள உயர்வும், இரண்டாம் தரத்திற்கு ரூ.11,690 சம்பள உயர்வும், முதலாம் தரத்திற்கு ரூ.15,685 சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.
அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 – 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
சாரதிகளுக்கு 6960 – 16,340 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
சமூர்த்தி/அபிவிருத்தி/விவசாய ஆய்வு அதிகாரிகளுக்கு 8,340-15,685ரூபாய் வரையில் சம்பளன அதிகரிப்பு
முகாமைத்துவ உதவியாளர்களுக்கு 12,710 – 17,550 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 12,710 – 25,150 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
பொது சுகாதார பரிசோதகர்/குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 12,558 -25,275ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
கதிரியக்கவியல்/ மருந்தாளர்களுக்கு 13,280 – 25,720 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
தாதியர்களுக்கு 13,725 – 26,165 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
அதிபர்களுக்கு 23,245 – 39,595 ரூபாய் சம்பள அதிகரிப்பு
ஆசிரியர்களுக்கு 17,480 – 38,020 ரூபாய் சம்பள அதிகரிப்பு
பொலிஸ் அதிகாரிகளுக்கு 10,740 – 23,685 ரூபாய் சம்பள அதிகரிப்பு
கிராம சேவகர்களுக்கு 11,340 – 23,575 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு 28,885 ரூபாய் சம்பள அதிகரிப்பு
பிரதிப் பணிப்பாளர்/பிரதி ஆணையாளர்களுக்கு 43,865 ரூபாய் சம்பள அதிகரிப்பு
பிரதேச செயலாளர்/பணிப்பாளர்/ஆணையாளர்/சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவிகளுக்கு 57,545 ரூபாய் சம்பள அதிகரிப்பு
வைத்திய அதிகாரிகளுக்கு 35,560 – 53,075 ரூபாய் சம்பள அதிகரிப்பு வருடாந்த சம்பள அதிகரிப்பு இரட்டிப்பாக்கப்படும்
அரச கூட்டுத்தாபனம்/சபைகள்/நியதிச் சட்ட நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்/முப்படையினருக்கு 2025 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

