
கடலில் மூழ்கிய இஸ்ரேல் பிரஜை உயிருடன் மீட்பு
அறுகம்பே கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இஸ்ரேல் பிரஜை ஒருவர் அறுகம்பே பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் அறுகம்பே கடலில் நீராடிக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதன்போது, அங்கு கடமையில் இருந்த அறுகம்பே பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர் இவரை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
