
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போதைப்பொருள் மீட்பு
-மன்னார் நிருபர்-
இந்தியாவின் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த சாரஸ் என்ற போதை பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
58 கிலோ எடை கொண்ட 29 கோடி மதிக்கதக்க போதை பொருளே இதன்போது மிட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் ‘சாரஸ்’ என்ற அதிநவீன போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்ததகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் உட்பட 3 பேரை பிடித்து கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
