
சொகுசு பேருந்து விபத்து: அதிஸ்டவசமாக தப்பிய பயணிகள்
கம்பஹாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த விபத்தில் அதிஸ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக பயணித்த அதிசொகுசு பேருந்து மழை காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
