ரஷ்யாவின் 15 பிராந்தியங்களை குறிவைத்து தாக்கிய உக்ரைன்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ உட்பட 15 பிராந்தியங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் 158 ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்கி அழித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் நகரத்திற்கு அருகில் உள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் நகர எல்லைக்குள் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையம் ஆகியவற்றை குறிவைத்து நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படவில்லை, எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்