
மட்டு. செங்கலடியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் திறப்பு
மட்டக்களப்பு செங்கலடியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளர் வனேந்திரன் சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி மற்றும் மாட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், கோல்டன் பெர்ணான்டோ ஆகியோர் அதிதிகளாகவும் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களான வ.சுரேந்திரன் , சோ.கணேசமூர்த்தி , பல.சந்திரகுமார் ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதன் நோக்கம், அவரின் வெற்றி தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
