கடந்த 6 மாதங்களில் முப்பத்து ஏழாயிரத்திற்கும் அதிகமான முதியோர்கள் உயிர் இழப்பு
ஜப்பானில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் முப்பத்து ஏழாயிரத்திற்கும் அதிகமான முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் தனிமையில் வாழும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியோர்களே அதிகளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிர் இழந்தவர்களில் 4,000 பேர் இறந்து ஒரு மாதத்தின் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
