
பெண் தோழிகள் உயிரிழப்பு
குருணாகல் – வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தில் இரண்டு தோழிகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக வெலிபென்னகஹமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிபென்னகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 49 வயதுடைய திருமணமாகாத இரண்டு தோழிகளே கடந்த 29 ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் 14 வருட காலமாக தோழிகளாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வெலிபென்னகஹமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
