திருப்பழுகாமம் சிவன் ஆலய மஹாகும்பாபிஷேகம்!

-மட்டக்களப்பு நிருபர்-

திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பாள் சமேத கேதீஸ்வரநாதர் (சிவன்) ஆலயப் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ மஹாகும்பாபிஷேகம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணிவரையுள்ள கன்னி லக்கின சுபமுகூர்த்த வேளையில் ஆலய நுழைவாயில் கோபுரம், மணிக்கோபுரம், தூபி மற்றும் பரிபால தெய்வங்களுக்கும் பக்த அடியார்கள் புடைசூழ, வேதபாராயணங்கள் முழங்க நிகழ்த்தப்பட்டது.

இம் மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவினை பிரதிஷ்டா பிரதமகுரு சிவாசாரிய திலகம் மதுர சாதகர் தேவி பூஜா துறந்தரர் சிவஸ்ரீ கேதீஸ்வரப் பவித்திரக் குருக்கள் தலைமையில் சாதக வேந்தன் சிவஸ்ரீ பால துஸ்யந்தக் குருக்கள்,வேத சுரபி சிவஸ்ரீ கேதீஸ்வர ஹரிஹர குருக்கள்,பிரம்பஸ்ரீ தர்ஷன் சர்மா,பிரம்மஸ்ரீ ரா.பிரபு ஷர்மா,பிரம்மஸ்ரீ தனுஷன் ஷர்மா,சிவஸ்ரீ சுதாகரக் குருக்கள்,சிவஸ்ரீ சதா பரணிதரக் குருக்கள்,சிவஸ்ரீ பால பிரதீபக் குருக்கள்,சிவஸ்ரீ கெ.மாதவக் குருக்கள் மற்றும் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சிறிதரசர்மா ஆகியோர் இணைந்து நிகழ்த்தி வைத்தனர்.

இப் பெருவிழாவினைக் காண மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபக்கமும் இருந்து பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து 11 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று,11.09.2024 அன்று 1008 சங்குகளால் சங்காபிஷேகம் மற்றும் பாற்குடப் பவனியும் நடைபெற்று,கும்பாபிஷேக மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்